ஆரம்ப விலை ரூ.5,999: சியோமி ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.!
சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்ககது.குறிப்பாக சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் மாடல் வரும் செப்டம்பர் 19-ம் தேதி 12மணிக்கு அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில் வரும் 10-ம் தேதி 12மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில் வரும் 11-ம் தேதி 12மணிக்கு விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Don't have a time? Watch this Quick Video:
https://youtu.be/3PAKcjg176o
ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ஸ்மார்ட்போன்கள் கருப்பு, நீலம், தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும். அதேபோன்று ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், தங்கம் ,சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும்
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் குறிப்பிட்ட சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 6ஏ:
டிஸ்பிளே: 5.45 எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேசெயலி: மீடியாடெக் ஹெலியோ ஏ22
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ரேம்:3ஜிபி
மெமரி: 16ஜிபி/32ஜிபி
பேட்டரி 3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

ரெட்மி 6:
டிஸ்பிளே: 5.45 எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேசெயலி: மீடியாடெக் ஹெலியோ ஏ22
ரியர் கேமரா: 13எம்பி+5எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ரேம்:3ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
பேட்டரி 3000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

ரெட்மி 6 ப்ரோ:
டிஸ்பிளே: 5.45 எச்டி பிளஸ் டிஸ்பிளேசெயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
ரியர் கேமரா: 12எம்பி+5எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
ரேம்:3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
பேட்டரி 4000எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

விலை:
16ஜிபி கொண்ட ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ.5999-ஆக உள்ளது, அதேபோல் 32ஜிபி கொண்ட ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ.6999 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போன் விலை ரூ.7,999-ஆக உள்ளது, அதேபோன்று 64ஜிபி கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது. குறிப்பாக 32ஜிபி கொண்ட ரெட்மி 6ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது, அதேபோன்று 64ஜிபி கொண்ட ரெட்மி 6ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.Also Read :
Google-ஐ நம்ப வேண்டாம்!! Google SPY!!!
https://youtu.be/jghEyF7Vwy0
Kerala - Before and After Flood Video
https://youtu.be/0adBA3WiN4U
Jio phone 2 at 2999/-
https://youtu.be/AI2keMAexVA
நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம்
https://youtu.be/UMzJrimNwkk
ஜியோ புயல்: 1 நொடிக்கு 1ஜிபி
https://youtu.be/IM-KIhMnLJU
₹ Indian Rupee (ரூபாய்) and English(India) in your PC
https://youtu.be/OSwvXfIvbD0
JioFi Buy? உசார் ஆய்கங்க
https://youtu.be/PYn_cld8MW8
JioFi @499 offer?
https://youtu.be/t5kImFuYAwg
No comments:
Post a Comment
Hai , Post your comment . (required, Bugs, Errors )